Friday, September 12, 2014

ஊரை ஏமாற்றிய உலமா சபை உப தலைவர் ஜெயிலில் கம்பி எண்ணுகின்றார்

தொப்பி, தாடி, நீண்ட ஜுப்பா என்று வேடம் போட்டு ஏமாற்றும் போலிப் பூசாரிகளான மெளலவிகள் குறித்து வெளியிடப்படும் உண்மைச் செய்திகளை, குருட்டுப் பக்தி காரணமாக பலர் நம்ப மறுக்கின்றனர். இதோ, அனைவரும் அறிந்துகொள்ள, உலமா சபை உப தலைவர் கம்பி எண்ணும் செய்தி ஆதாரத்துடன்.....

உலமா சபை உப தலைவர் 40 கோடி திருடிய செய்தியை பல பேர் நம்ப மறுத்தனர். இதோ அந்த செய்தி :

உலமா சபை உப தலைவர் 40 கோடி மோசடி, பலரை ஏமாற்றியுள்ளார் (click here)    http://jamathgames.blogspot.com/2014/08/40.html


தற்பொழுது குறித்த புர்ஹான் மெளலவி சிறையில் கம்பி என்னும் செய்தி சோனகர் இணையத்தளத்தில் புகைப்படங்களுடன் விபரமாக வெளியாகியுள்ளது, அதனை இந்த இணைப்பில் சென்று, கொமண்ட்ஸ் களுடன் சேர்த்து வாசிக்கலாம் :

http://www.sonakar.com/?p=28605



அல்லது இதே செய்தியை இங்கேயும் வாசிக்கலாம்:


அண்மையில் புர்ஹான் மௌலவி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட விவகாரம் ஊடகங்களுக்கு மாத்திரமன்றி சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகளுக்கும் பெரும் தலையிடியாகவே மாறியிருந்தது. அளுத்கம விவகாரத்தினால் பட்ட காயங்கள் ஆறாத நிலையில் ஜம்மியத்துல் உலமாவுக்கும் ஒரு தலையிடியாகவும் மாத்திரமன்றி அழுத்தமாகவும் மாறக்கூடிய குறித்த விவகாரத்தினை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கான அறிவுரையே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நலன்விரும்பிகள் அனைவராலும் வழங்கப்பட்டிருந்தது.
 

 
எனினும், விடயம் கைமீறி கைது வரை சென்றது மாத்திரமன்றி தொடர்ந்தும் இவ்விவகாரத்தில் அநீதியிழைக்கப்பட்டு வருவதாக வழக்கைத் தொடர்ந்த தரப்பினர் கருதி வந்த நிலையில் நேற்றைய தினம் (வியாழன்) பல்லேகெல சிறைச்சாலையில் புர்ஹான் மௌலவியை நீதியமைச்சர் ரவுப் ஹகீம் சந்தித்து உரையாடியுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து நீதியமைச்சர் ரவுப் ஹகீம் குறித்த விடயத்தில் தலையிட்டு அநீதியிழைக்க முனைவதாக வழக்கைத் தொடர்ந்தவர்கள் கவலை கொண்டுள்ளனர். எனவே அவர்களது நியாயம் எடுத்துரைக்கப்படுவதற்கான வாய்ப்பையளிப்பது நீதியானதாகும்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் முயற்சிக்குப் புறம்பாக அமைச்சர் ரவுப் ஹகீம் தனது ஆளுமையைப் பயன்படுத்தி புர்ஹான் மௌலவியை பிணையில் வெளிக்கொண்டுவர முயல்வதாக வழக்குத் தொடுனர்கள் தரப்பினால் அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கும் நேற்றைய தினம் பதிவாகியிருப்பதாகவும் இன்னும் சிலர் வழக்குத் தொடரவும் தயாராகிவருவதாகவும் இவ்விடயத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
சமூக மக்களின் மனதில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து கண்ணியத்துடன் பார்க்கப்படும் உலமாக்களில் ஒரு சிலர் இவ்வாறு நிலை தவறும் பொழுது அது ஏனைய உலமாக்களையும் மாத்திரமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்கின்ற விடயத்தில் புர்ஹான் மௌலவி தரப்புக்கு அக்கறையிருந்திருந்தால் இந்த விவகாரத்திற்கு ஏற்கனவே திரைமறைவில் முடிவு காணப்பட்டிருக்கும். ஆனாலும் கைதாகி இத்தனை நாளாகியும் கூட குறித்த விவகாரத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதை விடுத்து முடிந்தால் பணத்தை எடுத்துப் பார் என சவால் விடுக்கும் வழியை புர்ஹான் மௌலவி தேர்ந்தெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
சமூகத்தின் நிலையை மாத்திரமன்றி இறைவனுக்குப் பயந்த நிலையில் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டிய அனைத்து சந்தர்ப்பங்களையும் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு ‘ஏலுமென்றால் எடுத்துப்பார் எனக்கு ஜனாதிபதியைத் தெரியும்’ என்று ஒரு கோடியே இருபத்தேழு லட்சம் கடனாகப் பெற்றவரிடம் தெரிவித்து முஸ்லிம் அடையாளத்துடன் சிறைச்சாலை வண்டியில் அவர் ஏறியதை நினைத்து அவரை விட அதிகமாக வழக்கைத் தொடர்ந்தவர்கள் கவலைப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்த சம்பவம் பற்றி முதன் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு லண்டன் பகுதியில் பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்திவரும் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் எம்மிடம் தெரிவித்த போது இவ்விவகாரத்தை முடிந்தளவு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் என வேண்டிக்கொண்டதோடு சோனகர் வலைத்தள ஆசிரிய பீடத்தின் உதவியோடு அவருக்குத் தேவையான மேலதிக தொடர்புகளையும் புர்ஹான் மௌலவியை அணுகக்கூடிய ஒரு சில பிரபலங்களின் தொடர்புகளையும் கூட நாம் பெற்றுக்கொடுத்திருந்தோம்.
என்னதான் தான் பணத்தையிழந்திருந்தாலும் உலமாக்கள் மீதான மரியாதையை சற்றும் இழக்காத குறித்த சகோதரரும் மடவளையில் வசிக்கும் அவரது மாமா மற்றும் சகோதரர்களும் மென்மேலும் பொறுமையாகவே இவ்விடயத்தைக் கையாண்டுவந்ததோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவற்றை அம்பலப்படுத்துவதை விட பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவே கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை முயற்சி செய்து வந்தார்கள்.


எனினும் திகதியிடப்பட்ட காசோலைகளைக் கொடுத்து நம்பிக்கையின் அடிப்படையில் பணத்தைப் பெற்றுக்கொண்ட புர்ஹான் மௌலவி தரப்பு கைதாகிய பின்னரும் கூட பணத்தைத் திருப்பித்தருவதைப் பற்றி வாய்திறக்காது தமக்குத் தெரிந்த பிரபலங்கள் ஊடாக இவ்விடயத்தைத் தமது பண பலம் கொண்டு அடக்கிவிடத் துடிக்கின்ற நிலையிலேயே புர்ஹான் மௌலவியிடம் ஒரு கோடியே இருபத்தேழு லட்ச ரூபாயை இழந்த குடும்பம் இனியும் யாரும் ஏமாறக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் இவ்விவகாரத்தை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் புர்ஹான் மௌலவி கைதான வழக்கின் அடிப்படையில், மடவளயில் வசிக்கும் குறித்த லண்டன் தொழிலதிபரின் மாமாவுடன் கடந்த காலங்களில் வியாபார உறவை வைத்திருந்த புர்ஹான் மௌலவி தனக்கு அவசரமாக தேவைப்படுவதாகக் கூறி 2012ம் ஆண்டில், பெப்ரவரி 2013 திகதியிடப்பட்ட காசோலையொன்றை வழங்கி ஆரம்பத்தில் 27 லட்சம் கடனாகப் பெற்றுள்ளதோடு மீண்டும் 2013ம் வருடம் ஜனவரி மாதத்தில் மிக அவசர தொழில் தேவைக்கென ஓகஸ்ட் மாதம் திகதியிட்ட 80 லட்சம் மற்றும் 20 லட்சத்துக்கான இரு காசோலைகளை வழங்கி ஒரு கோடி பணத்தினை மீண்டும் கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தமது குடும்ப தேவைகளுக்காக ஒதுக்கி வைத்திருந்த பணத்தினை தனது மாமாவின் வேண்டுதலின் பேரில் வழங்கிய லண்டன் சகோதரருக்கு தனக்கு வழங்கப்பட்ட முதலாவது காசோலைக்கான பணமும் கிடைக்கப்போவதில்லையென்பது ஓகஸ்ட் மாதம் புர்ஹான் மௌலவியைத் தொடர்பு கொண்டதன் பின்னரே தெரியவந்துள்ளது.
அவ்வேளையில் குறித்த சகோதரரின் தந்தை நோய்வாய்ப்பட்டு கொழும்பு டர்டன்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலை கட்டணம் ஆறு லட்சத்தைத் தாண்டியதால் புர்ஹான் மௌலவியை அவசரமாகத் தொடர்பு கொண்டு வைத்தியசாலைக் கட்டணத்திற்குத் தேவையான பணத்தினைப் பெற முயற்சி செய்த போது மிகவும் அலட்சியமாக கையாண்டுள்ள அவர் பணம் கிடைக்கும் போதுதான் தரலாம் என உதாசீனப்படுத்தியதன் பின்னரே பணம் கொடுத்த சகோதரர் விழித்துக்கொண்டுள்ளார்.

எனினும் துரதிஷ்டவசமாக அவரது தந்தையைக் கவனிப்பதிலேயே நேரம் கழிந்ததாலும் அதன் பின்னர் அவரது தந்தையார் நவம்பர் மாதம் வபாத்தானதாலும் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) குடும்ப விடயங்களில் ஈடுபட்டு வந்ததாலும் புர்ஹான் மௌலவி விவகாரத்தை அவ்வப்போது தொலைபேசியூடாக பேசி வந்த அவர் பின்னர் மடவள பகுதிக்கு சென்று முயற்சித்த போதே அங்குள்ள பிரதேச வாசிகள் மூலம் புர்ஹான் மௌலவியின் ஏனைய பண விவகாரங்கள் பற்றி அறிந்துகொண்டுள்ளார். எனினும் மிகவும் மரியாதையுடன் அவரை அணுகிய குறித்த சகோதரர் மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியிருக்கின்றார்.
பணத்தை மீள வழங்குவதில் அக்கறை செலுத்தாத நிலையில் தொடர்ந்தும் அலட்சியமாக இருந்து வந்த புர்ஹான் மௌலவிக்கு எதிராக குறித்த தரப்பினர் வழக்குத் தொடர்ந்ததோடு புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகள் மற்றும் ஆதாரத் திரட்டல்களின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு பல்லேகெல சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்போது ஆரம்பத்தில் குறித்த காசோலையை தான் வழங்கவில்லையெனவும் பின்னர் கையொப்பம் தனதில்லையெனவும் புர்ஹான் மௌலவி தெரிவித்து வந்தாலும் கைரேகையைக்கொண்டு புலனாய்வுப் பிரிவினர் உறுதி செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கூட குறித்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ அல்லது பணத்தை மீளத் தருவதற்கான ஏற்பாடுகளை செய்யவோ மறுத்துவரும் புர்ஹான் மௌலவி தரப்பு முன்னரே தனக்கு ஜனாதிபதியைத் தெரியும் என சவால் விட்டது போன்று பிரபலங்களை அணுகி அவர்கள் மூலமாக சிறையிலிருந்து வெளிவருவதுடன் குறித்த விடயத்தினை மூடி மறைக்க முயற்சிக்கிறார் என்பதும் அதற்கு தற்போது நீதியமைச்சர் ரவுப் ஹகீமின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் அதன் அடிப்படையில் நேற்றைய தினம் பதுள்ள செல்லும் வழியில் பல்லேகல சென்ற அமைச்சர் ரவுப் ஹகீம் புர்ஹான் மௌலவியை சந்தித்ததாகவும் இதனால் திட்டமிட்டபடி தமக்கு அநீதியிழைக்கப்படப் போவதாகவும் வழக்குத் தொடுனர்கள் தரப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விகாரம் குறித்து ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர்களுள் ஒருவராகவும் புர்ஹான் மௌலவி இருப்பதனால் ஜம்மியாவிடம் இது பற்றி பேசப்பட்டதா எனக் கேட்கப்பட்டபோது கண்டி, லைன் பள்ளியில் வைத்து ஜம்மியா தலைவர் ரிஸ்வி முப்தியிடம் இது குறித்து பேசப்பட்ட போது ‘இது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் இதில் ஜம்மியா தலையிட முடியாது’ என ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ள அதே நிலையில் இதற்கு முன்னர் ஒரு சில இடங்களில் ஜம்மியத்துல் உலமாவின் பெயர்த்துணையில் வேறு சில விடயங்களில் இருந்தும் புர்ஹான் மௌலவி தப்பிக்கொண்டதாக வழக்குத் தொடருனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றும் (இதுவரை) ஜம்மியத்துல் உலமாவின் இணையத்தளத்தில் உதவித் தலைவர்களில் ஒருவராக புர்ஹான் மௌலவியின் பெயர் அடங்கியிருப்பதும் (http://www.acju.lk/about/committee/)அவர் கைதாகி 14 நாட்களாகும் நிலையில் பாரிய நிதிமோசடி வழக்கொன்றில் கைதாகியிருக்கும் ஒருவர் பற்றிய தமது நிலைப்பாட்டை ஜம்மியா தெரிவிக்காமல் இருப்பதும் கூட தமக்கு சந்தேகத்தைத் தருவதாக குறித்த குடும்பம் தமது கவலையை வெளியிட்டுள்ளது. குறிப்பு: இப்பதிவு உருவாக்கப்படும் வேளையில் ஜம்மியா இணையத்தில் உப தலைவர் எனும் பதவியோடு காணப்பட்ட புர்ஹான் மௌலவியின் பெயர் தற்போது நிர்வாகக் குழு உறுப்பினராக மாறறப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (Update: இலங்கை நேரம் இரவு 9மணி).
ஒருவரின் குற்றம் மறைக்கப்படல் பற்றிய புரிந்துணர்வு ஒரு புறம் இருக்க அதையே சாதகமாக பயன்படுத்திக்கொள்வோர் மிகவும் சுதந்திரமாக தமது குற்றச்செயல்களை அரங்கேற்றி வருவது தொடர்வதோடு அதன் விளைவாக இறுதியில் காத்தான்குடியில் 9 வயது சிறுமியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் அளவு இது வளர்ந்து வரும் நிலையில் நீதியமைச்சர் தனது நிலைப்பாட்டையும் அதேவேளை இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஜம்மியாவின் ஒழுக்கநெறி என்ன? ஒருவகையில் முஸ்லிம் அடையாளத்தோடு சிறைச்சாலை வண்டியிலும் தைரியமாக ஏறிச்சென்ற புர்ஹான் மௌலவி தான் இதுவரை போதித்து வந்த நல்லொழுக்கத்தையும் இறையச்சத்தையும் கொண்டு தன்னால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்போகும் நீதியென்ன என்பது கேள்விக்குறியாகவும் இருக்கிறது!
- ருஷ்தி அமீர், கிழக்கு லண்டன் நிருபர்.





1 comment:

  1. well balance unbiased report.i always appreciate the jammath leelaikal.the aim of this facebook site is by exposing the culprits ,who hide in the name of religion, correcting the others is timely work.well done keep it up.

    ReplyDelete