Friday, September 22, 2017

Breaking News : TNTJ யில் பிளவு - PJ தலைமையில் புதிய ஜமாத் உருவாகின்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக PJ தலைமையில் புதிய ஜமாத் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. PJ பேசிய ஆபாச ஓடியோவை தொடர்ந்து, தற்பொழுது அப்பல்லோ ஹனீபா என்பவர் அந்த விடயத்தில் செட்டில்மென்ட் செய்த ஓடியோ வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே PJ யை விசாரிக்க TNTJ யின் தலைமை பத்து நாட்கள் அவகாசம் கொடுத்து இருந்தது. தற்பொழுது இயக்க தலைமையில் உள்ளவர்கள் PJ யை ஜமாத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பில் தங்களுக்குள் பேசி வந்த விடயங்கள் வெளியில் தெரிய வந்துள்ளதால், PJ தலைமையில் புதிய ஜமாத் உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. PJ தொடர்பான ஆடியோக்களை வெளியிட்டதில் தற்பொழுது TNTJ தலைமையில் உள்ள சிலபேருக்கு முக்கிய பங்கு உள்ளதாக சந்தேகம் வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க திருகோணமலை SLTJ யை சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள் என்ற செய்தியும் கிடைக்கப் பெற்றுள்ளது.


 PJ தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பிப்பது தொடர்பாக வெளியாகிய அறிவித்தலை இங்கே பார்க்கலாம்.







குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் TNTJ நிர்வாகம் மெளலவி P. ஜெய்னுலாப்தீன் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாது!

உண்மையாகவே குர்ஆன் சுன்னாஹ்வை மட்டும் இஸ்லாமாக ஏற்றுப் பின்பற்றும் அனைத்து TNTJ சொந்தங்கள் சார்பில்............

நாம் இன்று PJ அல்லது TNTJ பற்றிப் பேசுகின்றோம், அவர்களுடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றோம் என்றால் அதற்கான மிக முக்கிய காரணம் என்ன? PJ என்ற தனிமனிதர் மீது உள்ள அன்போ, அல்லது TNTJ என்ற அமைப்பின் மீது உள்ள பக்தியோ அல்ல, மாறாக உண்மையான குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாத்தை பின்பற்றும் தூய நோக்கமே ஆகும்.

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு ஆடியோவும், சில நாட்களுக்கு முன்னர் இன்னொரு ஆடியோவும் என்று வெளியாகி PJ விபச்சாரம் செய்தார் என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். உண்மையாகவே குர்ஆன் சுன்னாஹ்வை மட்டும் பின்பற்றுகின்றவர்கள் என்ற அடிப்படையில் நாம் இதனை உரிய முறையில் அணுகி பார்த்தோமா, அல்லது அதற்கு முரணான முறையில் நடந்து கொண்டோமா என்பதை சிந்திக்க வேண்டும்.

TNTJ யின் தற்போதைய தலைமைப் பொறுப்புக்களில் உள்ள ஒரு சிலர் PJ க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், PJ யை அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கருத்துக்களை அமைப்பிற்குள் முன்வைத்து உள்ளனர். அதே நேரம் ஆரம்பத்தில் வெளியாகிய ஓடியோவை நிரூபிக்க TNTJ நிர்வாகிகள் கால அவகாசமும் கொடுத்து, அந்த ஆடியோ விடயத்தில் PJ அவர்களுக்கு எதிராக ஒத்து ஊதினார்கள்.

குர்ஆன் சுன்னாஹ்விற்கு முரணான முறையில் TNTJ அமைப்பு PJ மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தாலோ, விசாரணை மேற்கொண்டாலோ, உண்மையாகவே குர்ஆன் சுன்னாஹ்வை மட்டும் பின்பற்றும் அனைத்து அங்கத்தவர்களும் அமைப்பை விட்டு வெளியேறவும், இன்ஷா அல்லாஹ் PJ அவர்களின் தலைமையில் தூய குர்ஆன் சுன்னாவை மட்டும் போதிக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உண்மையான குர்ஆன், சுன்னாஹ் அடிப்படையில் ஓடியோ, வீடியோ என்பவை சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப் பட முடியாதவை. அவற்றை ஒரு மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞருக்கு எதிராக TNTJ யின் இன்றைய நிர்வாகிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு பத்து நாள் கெடு கொடுத்த உள்நோக்கம் என்ன? குர்ஆன், சுன்னாஹ் அடிப்படையில் விபச்சாரத்திற்கு கண்ணால் நேரடியாகக் கண்ட நான்கு சாட்சிகள் வேண்டும் என்கின்ற சாதாரண முஸ்லிமிற்கும் தெரிந்த சட்டம் எப்படி TNTJ யின் இன்றைய நிர்வாகிகளுக்கு தெரியாமல் போனது? அந்த ஆடியோக்கள் உண்மையா, பொய்யா என்பது எமக்குத் தேவையில்லாத விடயங்கள். TNTJ யில் சில நிர்வாகிகள் திட்டம் போடுவது போன்று ஏதாவது விசாரணை அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் PJ அவர்களது கரத்தை பலப்படுத்துவோம் என்பதை TNTJ யின் நிர்வாகத்திற்குள் இன்று நேற்று நுழைந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

குறித்த ஆடியோக்கள் எல்லாம் உண்மை என்று உரியவர்கள் ஏற்றுக் கொண்டு, மேலும் கண்ணால் கண்ட நான்கு சாட்சிகளும் வந்துவிட்டார்கள் என்றாலும், அதனை விசாரிக்கும் உரிமை ஒரு இஸ்லாமிய ஆட்சியாளருக்கு மட்டுமே உண்டு என்பதே குர்ஆன், ஹதீஸ் கற்றுத்தரும் உண்மை ஆகும். PJ அவர்களே தானாக முன்வந்து தான் அந்தப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தேன் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவரை தண்டிக்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ இந்தியாவில் யாருக்கும் அதிகாரம் இல்லை. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி வந்து இப்படியான ஒரு விடயத்தை ஒப்புக்கொண்ட பொழுது, நபி (ஸல்) அவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் ஆட்சியாளராக இருக்காத காரணத்தால், அந்த சஹாபியை அதிகம் அதிகம் ஸுன்னத்தான தொழுகைகளை தொழுது கொள்ளும்படி மட்டுமே சொன்னார்கள். ஆகவே PJ அவர்களும் அதிகம் அதிகம் ஸுன்னத்தான தொழுகைகளை தொழுது கொள்வது போதுமானது ஆகும்.


TNTJ உள்ளே இருக்கும் சிலரின் தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காக PJ அவர்கள் மீது விசாரணை நடத்துவதையோ, அவரை அமைப்பில் இருந்து நீக்குவதையோ நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. PJ தொடர்பான முதல் ஆடியோவை நிரூபிக்க பத்து நாள் கெடு கொடுத்து, குர்ஆன் சுன்னஹ்வின் வழிகாட்டலை மீறியதற்காக TNTJ யின் தற்போதைய தலைமை உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கேட்பதுடன். தெளபா செய்துகொள வேண்டும்.


PJ அவர்கள் விபச்சாரம் செய்து இருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரமோ, உரிமையோ இல்லை என்பதை TNTJ தலைமைக்கு தெரிவித்துக் கொள்வதுடன், அத்தகைய நடவடிக்கைகள் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.


PJ பேசியது உண்மையாக இருந்தால், அதனை வெளியிட்டதில் முக்கிய பங்கு உள்ளே இருக்கும் சிலருக்கு இல்லாமல் இருக்க முடியாது என்பதை அனைவரும் அறிவோம். அத்தகைய துரோகத்தை செய்தவர்கள் யார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான், அவன் உரிய வகையில் வெளிப்படுத்துவான் என்று நம்புகின்றோம். நாம் PJ அவர்களை நேசிக்கின்றோம் என்றால், அதற்கான காரணம் குர்ஆன் சுன்னாஹ் மட்டுமே தவிர வேறு ஒன்றுமில்லை. அஞ்ஞான இருளிலும், சிர்க், பித்அத்திலும் மூழ்கிக் கிடந்த தமிழகத்தில் தூய இஸ்லாமிய ஒளி பாய்கின்றது என்றால், அதற்கான காரணம் PJ அவர்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய ஒருவரை, தமது விருப்பு வெறுப்புக்களுக்காக TNTJ தலைமையில் உள்ள சிலர் பலிக்கடா ஆக்க முயல்வதை ஒரு பொழுதுமே ஏற்றுக்கொள்ள முடியாது.


TNTJ தலைமையில் களையெடுப்பு அவசியமாகின்றது என்பதையே, குர்ஆன், சுன்னாவிற்கு எதிரான அவர்களின் பத்து நாட்கள் கெடு கொடுத்த நடவடிக்கை காட்டுகின்றது. TNTJ தலைமை நிர்வாகிகள் உரிய மாற்றங்களை செய்வதுடன், செய்த தவறுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டு, இந்த விடயம் எல்லை மீறிப் போய், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் உண்மையாகவே குர்ஆன் சுன்னாஹ்வை மட்டும் பின்பற்றும் இயக்கம் உருவாவதை இன்ஷா அல்லாஹ் யாராலும் தடுக்க முடியாது.


இவ்வண்ணம்
தூய குர்ஆன் சுன்னாஹ்வை மட்டும் பின்பற்றும் TNTJ யினர்.





No comments:

Post a Comment