Monday, August 25, 2014

உலமா சபைக் கூட்டத்தில் மெளலவிகள் மத்தியில் அடிதடி சண்டை

அகில இலங்கை ஜமியத்துல் உலக்கை சபையின் கூட்டம் கொழும்பில் இடம்பெற்ற வேளை, அங்கு ரிஸ்வி முப்திக்கும், மெளலவி யூஸுப் நஜ்முத்தீன் அவர்களுக்கும் இடையில் ஆரம்பமான வாய்த்தர்க்கம் முற்றி அடிதடியில் முடிவடைந்துள்ளது.


இது குறித்து வெளியாகியுள்ள செய்திகளின் தொகுப்பு....


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் வருகின்ற மாதம் "சமாதான மாநாடு" என்கின்ற பெயரில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக உலமா சபை சார்பில் ரூபாய் 70 லட்சம் செலவிடப்படும் என்றும் தலைவர் ரிஸ்வி முப்தி தன்னிச்சையாக முடிவெடுத்து, அதனை கூட்டத்தில் அறிவித்தார்.

அப்பொழுது, நாட்டில் இன்று முஸ்லிம்கள் இருக்கும் நிமையில் இவ்வளவு பணம் செலவழித்து இப்படி ஒரு மாநாடு எதற்காக என்கின்ற கேள்வி அநேகமான மெளலவிகளின் வாயில் உதித்து, பக்கத்தில் இருந்தவர்களிடம் ஒவ்வொருவரும் இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டனர்.

இதனை அவதானித்த ரிஸ்வி முப்தி, சற்று கடுமையான தொனியில் இது நடந்தே தீரும் என்றும், அதற்கு தனக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதில் விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம் என்றும் கூறியுள்ளார்.

அப்பொழுது எழுந்த மௌலவி யூசுப் நஜிமுதீன் "அண்மையில் ராணுவ தளபதியை தெஹிவளை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து ரிஸ்வி முப்தி தலைமையில் சமாதானம் குறித்து உரையாற்ற வைக்கப்பட்டது, அவர் அழகாக பேசி விட்டு சென்றார், ஆனால் இராணுவத்தினரே கரிமலையுற்று பள்ளியை உடைத்திருக்கிறார்கள். இப்படியான நிலைமையில் 70 லட்சம் செலவழித்து இப்படி ஒரு மாநாடு தேவையா? இதற்கு யார் அனுமதி கொடுத்தது, இப்படி பணத்தை செலவழிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது" என்று கேள்வி கேட்டுள்ளார்.

எதிர்பாராத இந்தக் கேள்விகளால் கடும் கோவமடைந்த தலைவர் ரிஸ்வி முப்தி, தனது கதிரையில் இருந்து எழும்பி நின்றுகொண்டு மௌலவி யுசுப் நஜிமுதீனை கடுமையாக சாடியதுடன், "நீ வாயை பொத்திக் கொண்டு உட்காரு, உனக்கெல்லாம் என்னிடம் கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது?" என்றும் இன்னும் மோசமான வார்த்தைகளாலும் ஏசியுள்ளார், தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே "நீ வெளியே போ" என்று ரிஸ்வி முப்தி கூச்சல் போட்டுள்ளார்.

இதன் பொழுது மெளலவிகள் மத்தியில் இரண்டு குழுக்கள் உருவாகி, அடிதடி ஏற்பட்டுள்ளது. ரிஸ்வி முத்திக்கு சார்பான தப்லீக் மெளலவி ஒருவர் மெளலவி யூஸுப் நஜ்முதீனை தாக்க முயல, அவர் தண்ணீர் குடிப்பதற்காக வழங்கப்பட்ட கண்ணாடி கிளாஸ் ஒன்றால் அவரை தாக்கியுள்ளார், இதனைத் தொடர்ந்து அடிதடி இடம்பெற்றதுடன் சில கண்ணாடி கிளாஸ்களும் உடைந்து சிதறியுள்ளன.

மெளலவிகள் என்றால் வழமையாக வயிறுதான் வீங்கி இருக்கும், எனினும் இந்தக் கூட்டத்தின் பின்னர் சில மெளலவிமாரின் முகங்களும் வீங்கி இருந்தனவாம்.

 முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லாத நேரத்தில் உலமா சபைப் பணத்தில் 70 லட்சம் செலவைத்து ஆடம்பர சமாதான மாநாடு நடாத்த ரிஸ்வி முப்திக்கு என்ன தேவை என்பது பெரும்பாலான மெளலவிகளின் கேள்வி ஆகும்.

விஷயம் தெரிந்தவர்கள் மேலதிக விபரம் தர முன்வரவில்லை.மேலதிக விபரங்கள் கிடைத்தல் அவை உடனடியாக வெளியிடப்படும்.

ரிஸ்வி முப்தி தலைமைப் பதவிக்கு வந்தது முதல் ஜமியத்துல் உலமா பிழையான பாதியில் செல்வதாகவும், முஸ்லிம்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து மோசமான நிலையில் துரோகிகள் சபையாக பார்க்கப் படுவதாகவும் மூத்த மெளலவி ஒருவர் தெரிவித்துக் கவலைப் பட்டார்.



6 comments:

  1. An Vappa unakku maththavangada irachi avalavu ruahiya

    ReplyDelete
  2. குற்றவாளிகளை அல்லாஹ் தலைவர்களாக ஆக்கியுள்ளோம் என்பதை இச்சம்பவமும் உறுதிப்படுத்துகின்றதா!

    ReplyDelete
  3. If this news is baseless or not true, why do not the ACTU take legal action against them!

    ReplyDelete
  4. 90% fake news. Call and verify All Ceylon Jamiyyathul Ulama
    115373148

    ReplyDelete
  5. http://www.jaffnamuslim.com/2014/08/70_28.html

    ReplyDelete
  6. ஊரு ரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்

    ReplyDelete