Wednesday, May 28, 2014

தவ்ஹீத் மௌலவி ஸஹ்ரான் தங்க நகை களவெடுத்தாரா?


காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவராக இருக்கும் சஹ்ரான் மெளலவி என்பவர் தங்க நகை திருடி, போலிஸ் விசாரணையின் பின்னர் உண்மையை ஏற்றுக் கொண்டதாக ஒரு விடயம் காத்தான்குடி மக்கள் மத்தியில் வேகமாக பேசப்பட்டு வருகின்றது.

இது குறித்து எமக்கு கிடைத்துள்ள ஒரு மின்னஞ்சல் இங்கே தரப்படுகின்றது. :

இன்று சில அத்வைதிகள், மௌலவி ஸஹ்றான் தங்க நகை களவெடுத்தார் என்று அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த அவதூறுக்குரிய முழுப் பொறுப்பும் மௌலவி நௌபர் என்பவரே ஆவார். மௌலவி நௌபரோ மௌலவி ஸஹ்றானின் குடும்பத்தினர் தங்கநகை களவெடுத்தனர் என்றதொரு அவதூறைப் பரப்பி இருந்தார். இதை இங்கு சொல்வதற்கு சில சங்கடங்கள் இருந்தாலும் அவதூறு பரப்பிய மௌலவி நௌபர் அதை நிரூபிக்கவும் வரவில்லை. மன்னிப்பும் கோரவில்லை. தங்கநகை சம்பந்தமாக மௌலவி நௌபருக்கு வழங்கப்பட்ட வரிக்கு வரி மறுப்பை பின்வரும் லிங்கில் காணலாம். நியாய உள்ளம் கொண்டவர்களுக்கு எமது இந்த பதில் போதுமானதாகும். அவதூறு பரப்புபவர்களை அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறோம்.



(தாருல் அதர் அமைப்பின் பிரதம பிரச்சாரகர் M.I நௌபர் என்பவர் ஜமாஅத்தின் பிரச்சாரகர் M.C.M ஸஹ்றான் மீது அப்பட்டமான அவதூறை அள்ளி இறைத்திருந்தார் இதற்கு ஸஹ்றான் அவர்களினால் 14.02.2011 அன்று வழங்கப்பட்ட மறுப்பை இங்கு வெளியிடுகிறோம் மிக விரைவில் இந்த அவதூறை பரப்பிய போலீஸிற்கு எடுக்கப்பட்ட சட்டநடவடிக்கை ஆவணமாக எமது தளத்தில் வெளியிடப்படவுள்ளது)
அவதூறை பரப்பிய மௌலவி நௌபர்(காஷிபி)
New-Picture
(13.02.2011 அன்று நெளபரால் எழுதப்பட்ட‌ "களவு நடந்த‌து என்ன?" என்ற எழுத்துப் பிழைகளுடன் கூடிய விமர்சன‌ ஆக்கத்திற்கு பதில் அளிக்கப்படுகின்றது. கமலா தேவி விவகாரத்தில் மானம் இழந்து கிடக்கும் இவனுக்கு "கள்" போட்டு எழுத வேண்டாமென எமது தெள‍ஹீத் ஜமாஅத் நிருவாகம் கருதியதாலும், நானும் எனது குடும்பத்தினரும் இவனது விமர்சங்களால் அநீதியிழைக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் "இவன்" என்ற அடிமட்ட வார்த்தை இம்மறுப்பாக்கத்தில் கையாளப்படுகின்றது).
பொய்யன் நெளபரின் வாதம்: முன்னால் காத்தான் குடி தௌஹீத் ஜமாஅத்தின் பொருளாளர் சகோ உபைத் அவர்களின் மதினி குடும்பத்தினர் ஸஹ்றான் மௌலவி குடும்பத்தினரை கடந்த வாரம் விருந்து ஒன்றிற்கு அழைத்திருந்தனர்.
நமது பதில்: தெள‍ஹீத் ஜமாஅத்திற்கு சகோதரர் உபைத் எக்காலத்திலும் பொருளாலராக இருக்கவுமில்லை, இதை உபைத் சொல்லவுமில்லை.பொய்யர்களின் ஆயுட்காலம் அதிகமில்லை என்பதை அல்லா‍ஹ்வே நிரூபித்து விட்டான். நெளபர் என்ற இந்த புளுகு மூட்டை 08.02.2011 அன்று "தங்க நகை கொள்ளையில் ஸஹ்றான் மௌலவி குடும்பத்தினர் கைது!!" எனும் தலைப்பில் அனுப்பிய மின்னஞ்சலில் "உபைத் வீட்டில் நகைகளை திருடியதாக" தகவல் கூறியவன்,நாம் முன்வைத்த வலுவான கேள்விகளால் திணறிப் போய் இப்போது "சகோதரர் உபைத் மதினி வீட்டில்" என அந்தர் பெல்டி அடித்துள்ளான். இவன் இப்படித்தான் அடிக்கடி அசடு வழிபவன் என்பதால் இதனை நாம் பொருட்படுத்தவில்லை.இவன் முன்னால் சொன்னது போல் உபைத் வீட்டிலும் திருடவில்லை இப்போது இவன் சொல்வது போல் உபைத் மதினி வீட்டிலும் திருடவில்லை காலப் போக்கில்  இவனது கள்ளப் பொண்டாட்டி கமலா தேவி வீட்டிலும் திருடியதாகச் சொல்லிவிடுவானோ தெரிய‌வில்லை.(பொருத்திருந்து பார்ப்போம்) அடுத்து உபைத் மதினி எமது குடும்பத்தை விருந்துக்கு அழைத்ததாக மற்றுமொரு புரூடாவை அவிழ்த்துள்ளான். விருந்துக்கு அழைக்கவுமில்லை,குடும்பத்தை அழைக்கவுமில்லை. இதிலும் இவன் முபா‍ஹலா செய்ய வேண்டும். (இது முபா‍ஹலா பட்டியலில் முதன்மையானது)
பொய்யன் நெளபரின் வாதம்: விருந்துக்கு சென்றிருந்த இவர்களிடம் தங்கள் வீட்டு நகைகளையும் காட்டியுள்ளனர். பின்பு அவ்வீட்டுக் காரப் பெண்மணியிடம் நகையை உரிய இட்த்தில் வைத்து விட்டீர்களா எனக் கேட்கப் பட்ட போது ஆம் மஞ்சள் பெட்டியிலேயே வைத்து விட்டேன்என பதில் சொல்லியிருக்கிறார்.
நமது பதில்: இவன் சொல்வது யாருக்காவது புரிகின்றதா? "அவ்வீட்டுக் காரப் பெண்மணியிடம் நகையை உரிய இட்த்தில் வைத்து விட்டீர்களா எனக் கேட்கப் பட்ட போது.." இந்த வாசகத்தை நன்றாக ஊன்றிக் கவனியுங்கள்! வீட்டுக் காரப் பெண்மணியிடம் நகையை வைத்து விட்டீர்களா? எனக் கேட்டது யார்? ஒருவருடைய  வீட்டிற்குச் சென்று நகையை உரிய இடத்தில் வைத்து விட்டீர்களா? என அவரது சொந்த நகை பற்றி யாராவது விருந்தாளிகள் கேள்வி கேட்பார்களா? இவன் என்னதான் சொல்ல வருகிறான்? மஞ்சல் பெட்டி என்பதும் இப்போது இவன் கண்டு பிடித்த லேடஸ் பொய்யாகும். பல கலர்கள் இருக்கும் போது மஞ்சல் மஞ்சல் என இவன் எழுதுவது கூட கமலா தேவிக்கு நாம் மஞ்சல் கலர் இட்டதால் தானோ என்னவோ தெரியவில்லை.(மஞ்சல் பெட்டி விவகாரமும் முபா‍ஹலா பட்டியலில் இரண்டாவ‌து)
பொய்யன் நெளபரின் வாதம்: இவர்களும் விருந்திற்கு சென்றோமா சாப்பிட்டோமா கிளம்பி வந்தோமா என்றில்லாமல் திண்ட பீங்கானிலேயே.................உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தே பழக்கப் பட்ட ஸஹ்றான் குடும்பத்தினர் அவர்கள் காட்டிய தங்க நகையை மெதுவாக அபேஸ் செய்து விட்டனர்
நமது பதில்: மெதுவாக அபேஸ் செய்தோமாம்..! என்னமோ இவர் பார்த்துக் கொண்டு நின்றவர் போல் கதையளந்துள்ளார். இவரது இந்த வெற்று வாசகங்களிலிருந்து இவர் எம்மோடு அளவில்லாத ஆத்திரத்தில் கொதித்துப் போயுள்ளார் என்பது மட்டும் பளிச் செனத் தெரிகின்றது.(அபேஸ் விடயமும் முபா‍ஹலா பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.)
பொய்யன் நெளபரின் வாதம்: விருந்து முடிந்த்தும் நகை காணாமல் போயுள்ளதை அறிந்து கொண்ட அப்பெண்மணி தயவு செய்து யாராவது எடுத்திருந்தால் அல்லாஹ்வுக்காக தந்து விடுங்கள்எனக் கெஞ்சிக் கேட்டுள்ளார். இவர்களும் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத்தைப் போன்று கிளம்பி வந்துள்ளார்கள்.
நமது பதில்: என்னமோ இதில் உபைத் மதினி இவன் பொண்டாட்டி போல் ஒவ்வொரு பொய்யாக அடுக்கிக் கொண்டே போகின்றான். விருந்து முடிந்தது எனக் கூறுகின்றானே.. முதலில் விருந்துக்குப் போனால் தானே விருந்துக்கு ஆரம்பம் முடிவு என்பது வரும். இந்தப் புளுகு மூட்டை சொல்வது போல் நாம் விருந்துக்கு செல்லவுமில்லை,(ஏன் அந்த வீட்டிற்குல் நான் எனது காலை அடியெடுத்துக் கூட வைக்கவில்லை அல்லா‍ஹ் இவனை அடையாளப்படுத்துவானாக! இவனை தண்டிக்கும் பொறுப்பை அல்லா‍ஹ்விடமே விடுகின்றோம்) அப்பெண்மணி தந்துவிடுங்கள் எனக் கெஞ்சவுமில்லை (இவனது முபா‍ஹலா பட்டியலில் நான்காவதாக  வீட்டுக்காரப் பெண் கெஞ்சிய விவகாரம் இடம் பிடித்துள்ளது)
பொய்யன் நெளபரின் வாதம்: பின்பு நகையை யார் எடுத்திருப்பார்கள் என்பது தொடர்பில் அங்கிருந்த தனது உறவினர்கள் சிறு பிள்ளைகள் என சகலரிடமும் ஒரு விசாரனையை அப்பெண்மணி நாடாத்தியதில் ஸஹ்றான் குடும்பத்தினர்தான் எடுத்திருக்க வேண்டும் என வலுவாக சந்தேகப் பட்டுள்ளார். இதற்கு ஸஹ்றான் பின் காஸிம் குடும்பத்திற்கு ஏற்கனவே உள்ள கள்ளப் பெயரும் ஒரு முக்கிய காரனமாக இருந்துள்ளது.
நமது பதில்: அப்பெண் விசாரணை நடாத்தினாரா? இல்லையா? என்பது எமக்குத் தெரியாது. எமது கொள்கை எதிரிகள் சிலர் இச்சந்தர்ப்பத்தை லாவகமாகப் பயன்படுத்தி எம்மீது இந்த திருட்டு அவதூறைப் பரப்பினர்.அவர்களை அல்லா‍ஹ்விடம் நாம் ஒப்படைத்து விட்டோம். எமது குடும்பத்திற்கு எந்தக் கள்ளப் பெயரும் கிடையாது. கள்ளப் பெயர் இருந்திருந்தால் எம்மோடு சேர்ந்து இந்த நெளபர் பின் இப்றா‍ஹீம் என்ற பெண் பித்தன் எதற்கு தஃவா செய்தான்? "கேள்விப்படுவதை பரப்புபவன் பொய்யன்" என்ற பொன்மொழி மட்டும் இல்லையென்றால் இவனது தந்தை ஜமாலிய்யா மத்ரஸாவில் வஸூல் பணத்தை அபேஸ் செய்து தான் இவனை வளர்த்தாக நாம் கேள்விப்பட்ட செய்தியைக் கூற முடியுமே..!? ஆனாலும் இதனைக் கூறமாட்டோம். (எமது குடும்பம் திருட்டுக் குடும்பம் என்ற தேவி நாயகனின் அவதூறும் முபா‍ஹலா பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது)
பொய்யன் நெளபரின் வாதம்: குறித்த தினம் அன்றும் அடுத்த நாள் காலையிலும் ஸஹ்றான் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் அழைத்தும் நேரில் போயும் நகையை எடுத்திருந்தால் அல்லாஹ்வுக்காக தந்து விடுங்கள் கதுருவலையில் நகைக் கடை வைத்திருக்கும் எனது கனவனுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும்என தாழ்மையாக்க் கேட்டுக் கொண்டுள்ளார்.
நமது பதில்: இவன் சொல்வது போல் அப்பெண்மனி எமது வீட்டிற்கு வந்தது உண்மை தான்.ஆனால் நகையை எடுத்திருந்தால் அல்லாஹ்வுக்காக தந்து விடுங்கள்" எனச் சொன்னது அப்பட்டமான பொய்யாகும். எனது நகையைக் காணவில்லை என்று அப்பெண்மணி சொன்னவுடன் "அதை ஏன் எங்களிடம் சொல்கின்றீர்கள்? நாங்கள் திருடி விட்டோமென்று சந்தேகிக்கின்றீர்களா..? என நாம் கேட்ட போது, "இல்லையில்லை உங்களைச் சொல்வேனா..? நீங்கள் திருடியதாகச் சொன்னால் உங்கள் வீட்டிற்கு வருவேனா..? எனது நகையைக் காணவில்லை என்று தகவல் சொன்னேனே தவிர வேறு எதுவுமில்லை" என்றுதான் அப்பெண்மணி சொன்னார். வடிகட்டிய இந்த நெளபர் முட்டாளுக்கு எது நடந்தது? எது உண்மை என்பது தெரியாமல் கட்டாரில் இருந்து கொண்டு காத்தான்குடியில் உள்ள இவரது அரைக் கிருக்கர்கள் அளக்கும் பொய்களை அடுக்கிக் கொண்டே போகின்றான்.(முபா‍ஹலா பட்டியலில் ஆறாவது இடத்தை இது பிடித்துள்ளது)
பொய்யன் நெளபரின் வாதம்: பந்திக்கு பத்து தடவை பொய்ச் சத்தியம் செய்யும். மூச்சுக்கு முந்நூறு தடவை முபாஹலா (அழிவுச் சத்தியம்) செய்யும் ஸஹ்றான் குடும்பத்தினர் விடுவார்களா??
நமது பதில்: பந்திக்கு பல நூறு பொய்கள் சொன்னால் பத்துத் தடவை அல்ல பத்தாயிரம் தடவை சத்தியம் செய்யத்தான் செய்வோம். இவனது மனைவி நஷ்மலுடன் படுத்ததாக நாம் சொன்னால் பல்லாயிரம் தடவை இவன் சத்தியம் செய்வானல்லவா? அது மாதிரித்தான் இதுவும். இவன் மனைவி மற்றவனுடன் படுக்கையைப் பகிர்வதாகச் சொன்னால் அது எப்படிப் பொய்யோ அது போன்று தான் இதுவும். இவனது உம்மா உம்மா! நம்ம உம்மா என்ன சும்மாவா!?
பொய்யன் நெளபரின் வாதம்: நாங்கள் நகையை எடுக்கவில்லை அழிவுச் சத்தியம் (முபாஹலா) செய்யவும் தயாராக உள்ளோம். நீங்கள் ஏண்டதை செய்து கொள்ளுங்கள்என திமிறாக அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் அனுவளவும் இல்லாமல் பதிலளித்துள்ளார்கள்.
நமது பதில்: ஆரம்பத்தில் சந்தேகிக்காத அப்பெண் பின்னர் கொஞ்சம் எம்மை சந்தேகிக்க ஆரம்பித்தவுடன் நாம் அப்பெண்ணை முபா‍ஹலாவு (அழிவுச் சத்தியத்திற்)க்கு அழைத்தோம். அழிவுச் சத்தியத்திற்கு அழைத்தவுடன் "முடியாது" என அப்பெண் மறுத்ததற்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் சாட்சியாக உள்ளனர். எம்மை யாராவது பொய்யாக சந்தேகித்தால் நாம் சத்தியம் செய்துதான் அதனை மறுப்போம். எம்மிடம் நியாயம் இருந்தால் தன்னிலை விளக்கத்தின் போது முபா‍ஹலாவுக்குத் தான் அழைப்போம். நேர்மையுள்ளவர்கள் முபா‍ஹலாவுக்கு அழைப்பது அறிவுபூர்வமானது தானே..? இவனது  மனைவி விபச்சாரி என்றோ இவன‌து தாய் கொடுமைக்காரி என்றோ இவன‌து சகோதரிகள் வேசிகள் என்றோ யாராவது ஒரு பெண் இவர்களுக்கெதிராக அவதூறு கூறினால் இவன் என்ன செய்வான்? போனால் போகட்டும் என்று அமைதியாக புகை பிடிப்பானா? அல்லது அவதூறு பரப்புபவர்களை அழிவுச் சத்தியத்திற்கு அழைப்பானா? அவ்வாறு இவன் முபா‍ஹலாவுக்கு அழைத்தால் "திமிறாக அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் அனுவளவும் இல்லாமல் பதிலளிக்கிறான்" என நாம் இதனை எடுத்துக் கொள்ளலாமா? டிமென்ஸிய்யா நோயினால் இவன் பாதிக்கப்பட்டானோ தெரியவில்லை.
பொய்யன் நெளபரின் வாதம்: குறித்த அப்பெண்மணியும் வேறு வழி இல்லாமல் கதுருவலையில் இருக்கும் தனது கனவருக்கு தொலைபேசியில் நடந்த்தை தெரிவிக்க நகைக் கடை முதலாளியான அவர் காத்தான் குடி போலீஸாருக்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி தொலை பேசியில் உரிய விடயத்தை விளக்கிக் கூறியுள்ளார்.
நமது பதில்: அப்பெண்மணி யாருக்குத் தொடர்பு கொண்டார்? என்று எமக்குத் தெரியாது. இவனுக்கு இது எப்படித் தெரியுமோ அதுவும் தெரியாது. அறிவில்லாமல் நாம் எதையும் பேசுவது தகாது என்பதாலும் உருப்படியான எத்தகவலும் இதில் எமக்கு இல்லை என்பதாலும் இதனை அப்படியே விட்டு விடுகிறோம்.
பொய்யன் நெளபரின் வாதம்: இதனால் சம்பவதினம் மதிய வேளையில் போசீஸார் ஸஹ்றான் வீட்டிற்கு வந்து ஸஹ்றானின் தாய் , மனைவி, மற்றும் ஸைனி ஆகியோரை குறித்த பெண்மணியுடன் விசாரனைக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.
நமது பதில்: மட்டி மடயனான இந்த போக்கிரி உளருவதில் எல்லை கடந்து விட்டான். உண்மை என்னவென்றால் சந்தேகித்த அப்பெண் போலீஸில் முறைப்பட்டவுடன் போலீஸார் எமது வீட்டிற்கு வந்து எமது மனைவியை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். எமது மனைவியை தனியே அனுப்பக் கூடாது என்பதற்காக மாத்திரமே எமது தாயும் எமது சகோதரர் ஸைனி மெளலவியும் போலீஸ் நிலையம் போனார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் இவன் வாய்க்கு வந்ததையும் போனில் இவன் அடியாட்கள் சொன்னதையும் உளறிக் கொட்டியிருக்கின்றான்.அத்தோடு மதிய வேளையில் போலீஸார் வந்தார்கள் என்பதும் இவனது கற்பனையாகும். (எமது குடும்பத்தை போலீஸார் விசாரனைக்காக கைது செய்தார்கள் என்றும் "மதிய வேளையில் கைது" என்பதும் இவனது  முபா‍ஹலா பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது)
பொய்யன் நெளபரின் வாதம்: போலீஸார் என்ன முறையில் விசாரனை செய்தார்கள் என்ற விபரம் கிடைக்கவில்லை.
நமது பதில்: என்ன‌மோ இவன் எழுதும் எல்லாவற்றையும் விபரம் கிடைத்துத்தான் இந்த அயோக்கியன் எழுதியது போன்று இதில் மட்டும் விபரம் கிடைக்கவில்லை என கவனமாக நழுவுகின்றான்.(இவனது இந்த வாதத்தில் இவன் உறுதியில்லை என்பதையும் பின்னர் தனக்குத் தானே இதே வாதத்தில் இவன் முரண்படுவதையும் இன்ஷா அல்லா‍ஹ் நிரூபிப்போம்)
பொய்யன் நெளபரின் வாதம்: ஆனால் விசாரனையின் போது ஸஹ்றானின் மனைவி (வளர்ப்பு நல்லம் என்பதால்) இவர்கள்தான் நகையை திருடியது என்பதை ஒப்புக் கொண்ட்துடன் வீட்டில் எங்கே நகையை பதுக்கி வைத்துள்ளார்கள் என்பதும் தனக்கு தெரியும் எனக் கூறியுள்ளதால் போலீஸார் நகைக்கு உரிய பெண்ணையும் ஸஹ்றானின் மனைவியையும் மாத்திரம் (ஸைனியும் தாயும் போலீஸிலேயே இருக்க) வீட்டுக்கு அழைத்து வர ஸஹ்றான் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பெட்டியை, நகையை ஸஹ்றானின் மனைவியே போலீஸாரிடம் எடுத்துக் கொடுத்துள்ளார்.
நமது பதில்: எமது மனைவியின் வளர்ப்பு நல்லமில்லை என்று சொல்ல இவனால் முடியாது. ஏனெனில் இவனது முதல் பொண்டாட்டியும் எமது மனைவியின் குடும்ப உறவினராக உள்ளதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நாடகமாடியுள்ளான்.அத்துடன் பொய்யர்களின் ஆயுட்காலம் அதிகமில்லை என்பதை மற்றுமொரு முறை தேவி நாயகர் நிரூபித்துள்ளார். இவன் சொல்வது போன்று ஒன்றுமே நடக்கவில்லை. போலீஸார் தான் எமது வீட்டையும் செக் பண்ண வேண்டுமென்று சொன்னவுடன் நாங்கள் ஒத்துக் கொண்டோம். நாங்கள் போலீஸ் நிலையத்தில் இருக்க போலீஸ் எமது மனைவியையும் நகைச் சொந்தக்காரியையும் அழைத்துப் போனது.அங்கு அல்லா‍ஹ் எமது உண்மை நிலையை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தான். போலீஸ் எமது வீட்டை பரிசோதித்த போது எந்த நகையையும் அங்கு பெற்றுக் கொள்ளவில்லை.(எமது மனைவி எமது சகோதரிகள் உட்பட எமது தாயும் கூட தங்க நகைகள் அணிவதில்லை,தங்க நகைகளும் எமது வீட்டில் அறவே இல்லை) இதில் இந்த அயோக்கியன் சொல்வது போல் "வீட்டில் எங்கே நகையை பதுக்கி வைத்துள்ளார்கள் என்பதும் தனக்கு தெரியும்" என மனைவி சொல்லவுமில்லை, மஞ்சல் பெட்டியில் இருந்து நகையை எடுக்கவுமில்லை. எமது வீட்டில் எந்த மஞ்சல் பெட்டியும் இல்லை. இவன் எந்த மஞ்சல் பெட்டியைச் சொல்கின்றானோ தெரியவில்லை..!! (இதனை நாம் டைப் பெய்யும் போது இவனது அறியாமையை எண்ணி எம்குடும்பத்தவர்கள் எள்ளி நகையாடினர்) (இவனது இந்த புளுகு மூட்டையுடன் மொத்தம் சேர்த்து முபா‍ஹலா பட்டியல் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது)
பொய்யன் நெளபரின் வாதம்: பின்னர் குறித்த பெண்மணியிடம் போலீஸார் நீங்கள் இது தொடர்பில் முறையீடு செய்ய விரும்புகிறீர்களா? எனக் கேட்க அவரும் நகை திரும்பக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் ஸஹ்றான் குடும்பத்தினரும் இதை வெளியே சொல்லிவிடாதீர்கள் எனக் கண்ணீர் விட்டுக் கதறி உள்ளார்கள்.
நமது பதில்: அப்பெண்ணிடம் போலீஸ் கேட்டார்களா? இல்லையா? என்று எமக்குத் தெரியாது. நகை அப்பெண்ணுக்குக் கிடைத்தது உண்மைதான். அது எமது வீட்டில் இருந்து கிடைத்தது என்பது வடிகட்டிய பொய்.இதை வெளியே சொல்லிவிடாதீர்கள் எனக் கண்ணீர் விட்டுக் கதறி உள்ளார்கள்" என்பது இவன் கண்ட கனவாகும். கமலா தேவி விவகாரத்தால் தனக்கு “விவாகரத்து” ஆகி விடுமோ எனத் துவண்டு போயுள்ள இந்த லகட பாண்டியன் என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் எமது குடும்பத்தை அசிங்கப்படுத்த முயன்றுள்ளான். எமது குடும்பம் கண்ணீர் விடவுமில்லை கதறவுமில்லை ஒரு வேளை கமலா தேவி விவகாரத்தால் இவன் கட்டாரில் கைசேதப்பட்டு கண்ணீர் வடித்ததைத் தான் நிலைதடுமாறி எழுதியுள்ளான் போலும்.
பொய்யன் நெளபரின் வாதம்: அத்துடன் அப்பெண் மணியின் உறவுக் காரி ஒருத்தியும் சம்பவம் முடிந்து செல்லும் போது ஒழுங்கையில் வைத்து காலையிலேயே இதை திருப்பித் தந்திருந்தால் இவ்வளது தூரம் போயிருக்கத் தேவையில்லையஹாஎன ஏசிவிட்டு சென்றார் என்பதை ஸஹ்றான் குடும்பத்தினர் வசிக்கும் ஒழுங்கையில் உள்ளவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
நமது பதில்: (இவனுக்கு தகவல்சொல்பவர்கள் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கப்பா..!!!)  இவன் உளறுவது போன்று அப்பெண்மணி எந்த உறவுக்காரப் பெண்ணுடனும் வரவில்லை.இதுவும் இவனது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய் புரட்டுக்களில் ஒன்று. அத்துடன் நாங்கள் களவெடுத்திருந்தால்தானே அப்பெண்ணோ அல்லது உறவுக்காரப் பெண்ணோ எங்களுக்கு  ஏசியிருக்க முடியும்? (முதலில் உறவுக்காரப் பெண் வரவில்லை என்பது தனி விஷயம்) மாறாக நகைச் சொந்தக்காரிக்கு எமது ஒழுங்கையில் உள்ளவர்கள் ஏசியது தான் உண்மையே தவிர தேவி நாயகன் சொல்வது போல் எதுவுமில்லை. ஒழுங்கையில் உள்ளவர்கள் உறுதி செய்ததாக வேறு கதையளக்கிறான். ஒழுங்கையில் உள்ளவர்கள் என்றால் யார் அவர்கள்? அவர்களது வாக்கு மூலத்தை ரெகோர்ட்டிங் செய்து எமக்குக் காட்ட முடியுமா? மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இந்த அயோக்கியனை அல்லா‍ஹ்வின் சாபம் கொஞ்சமும் விட்டு வைக்காது. 
பொய்யன் நெளபரின் வாதம்: மேற்படி சம்பவத்திற்கு சாட்சியாக ஸஹ்றான் மௌலவியின் அயலவர்கள் மற்றும் ஒழுங்கையில் வசிப்பவர்கள், சகோ உபைதின் மதினி குடும்பத்தினர், மற்றும் காத்தான் குடி போலீஸார் ஆகியோர் உள்ளார்கள்.
நமது பதில்: இவனது கூற்றில் இவன் உண்மையாளனென்றால் மேற்குறித்த சாராரின் வாக்கு மூலங்களை வைத்து இணையத்தில் நிரூபிக்கட்டும். குறிப்பாக எமது அயலவர்களை வைத்து நிரூபிக்க வேண்டும்.(கமலா தேவி விவகாரத்தை சான்றுடன் நாம் நிரூபித்தது போன்று)
பொய்யன் நெளபரின் வாதம்: நீங்களும் இதன் உன்மை நிலையை உறுதி செய்து கொள்ள விரும்பினால் பின்வரும் வழிகளில் முயற்சிக்கலாம்.
 1-சகோ உபைத் அவர்கள் மதினி குடும்பத்தினரூடாக.....
 2-ஸஹ்றான் குடும்பத்தார் வசிக்கும் ஒழுங்கையில் உள்ளவர்களூடாக............
3-காத்தான் குடி போலீஸ் ஊடாக........
நமது பதில்: இதற்கு முன்னரே பதில் சொல்லி விட்டோம்.அத்துடன் "போலீஸார் என்ன முறையில் விசாரனை செய்தார்கள்" என்ற விபரம் கிடைக்கவில்லை" சற்று நேரத்திற்கு முன்னர் தான் சொன்னான். இப்போது போலீஸிடம் கேட்குமாறு சொல்கின்றான். இவன் போகாத ஊருக்கு வழி சொல்ல எத்தனிக்கின்றான் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும்.
பொய்யன் நெளபரின் வாதம்: எனக்கு மேற்படி தகவல்களை தந்தவர்கள் சகோ உபைத் அவர்களின் மதினி குடும்பத்தைச் சார்ந்த நம்பகமான ஒருவரும் ஸஹ்றான் குடும்பத்தாரின் அயலவர்களுமாவர்.
நமது பதில்: "இவர்கள் தகவல் தந்தார்கள்" என எவ்வித ஆதாரங்களுமின்றி இவன் சொன்னால் நாம் நம்புவதற்கு என்ன இவனைப் போன்ற முட்டாள்களா? இவனுக்கு எங்கள் அயலவர்கள் தகவல் தந்தால் அவர்களின் பெயர் விபரத்தை ஏன் இவன் வெளியிடவில்லை? அது என்ன "சாவுக்கடல் சாசனச் சுருளா"? அயலவர்கள் வாக்கு மூலம் தந்தால் அதை எடுத்துக் காட்ட வேண்டும்.நம்பகமான எவ்வித‌ ஆதாரங்களுமில்லாமல் ஆக்கம் எழுதும் இந்த ஆசாமியின் கதை எப்படியிருக்கின்றதென்றால் "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" எனும் பழமொக்கு ஒத்திருக்கின்றது.
பொய்யன் நெளபரின் வாதம்: நான் இவ்வருடம் நாடு வரும் போது இவர்கள் யார் பொய்யர்என்ற தலைப்பில் விவாத்த்துக்கும் அதனைத் தொடர்ந்து அழிவுச் சத்தியத்திற்கும் வரும் சந்தர்ப்பத்தில் குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சாட்சிகள் அனைவரையும் கொண்டு வந்து நிறுத்தி நிரூபிக்க தயாராகவே இருக்கிறேன்.
நமது பதில்: பச்சைப் பொய்யனான இவனுடம் விவாதம் செய்வது ஒரு புறமிருக்கட்டும். முதலில் நாம் திருடினோம் என்பதை பகிரங்க அழிவுச் சத்தியத்தின் ஊடாக இவன் நிரூபிக்க வேண்டும். விவாதம் என்று கவனமாக நழுவப் பார்க்கின்றான்.இவனுடன் விவாதம் செய்வது எமக்கு ஒரு பொருட்டே இல்லை. இவன் சொன்னது போல் "யார் பொய்யன்?" எனும் தலைப்பில் எமதூர் கலாச்சார மண்டபத்தில் இவனுடனும் இவனது அடிவருடிகளான சிபான்,அஸ்பர்,நஷ்மல் போன்றோருடனும் பகிரங்கமாக விவாதிக்க நாம் தயாராகத்தான் உள்ளோம். எந்த விவாதம் செய்வதென்றாலும் அனைத்திற்கு முன்னால்  "நகைத் திருட்டு" என்ற அவதூறுக்கு பகிரங்கமாக முபா‍ஹலாவுக்கு வர வேண்டும். அதனது முழுச் செலவையும் நாம் பொறுப்பெடுக்கின்றோம். ஏற்பாடுகளை நாமே செய்கின்றோம். (சகோதரர்களே! இவன் முபா‍ஹலாவுக்கு வருவான் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?   எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை, முபா‍ஹலா என வந்தால் எங்கே "கமலா தேவிக்கும்" முபா‍ஹலாவுக்கு அழைத்து விடுவானுகளோ என அச்சம் உள்ளூர இவனுக்கு இருக்காமல் விடுமா? பார்ப்போம்)
பொய்யன் நெளபரின் வாதம்:ஆனால் ஸஹ்றான் குடும்பத்தினர் இது தொடர்பில் மூண்று பொய்களை தற்போது பரப்பி வருகின்றனர்.
நமது பதில்: நாம் எந்த பொய்யையும் பரப்பவில்லை. பொய்களைப் பரப்புவது சம்பளமில்லாத முழு நேர வேலைஇவரது வேலையில் நாம் கைவைப்போமா? என்ன?
பொய்யன் நெளபரின் வாதம்: 1-சம்பவம் நடை பெற்றது என்பதை தவிர மேலதிக விபரங்கள் தெரியாதவர்களிடம் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை நௌபரின் கட்டுக் கதைஎனக் கூறுகின்றனர்.
2-விடயம் பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்களிடம் குறித்த பெண்மணி எங்களை சந்தேகப் பட்டே போலீஸ் சென்றார். பின்னர் அதற்காக எங்களிடம் மண்ணிப்புக் கேட்டார்என கதை விடுகிறார்கள்.
நமது பதில்: நாம் எந்தக் கதையும் யாரிடத்திலும் விடவில்லை. விடயத்தைப் பற்றி எம்மிடம் வினவும் சகலரிடமும் நாம் பதில் அளிக்கும் போது குறித்த பெண்மணி எங்களை சந்தேகப் பட்டே போலீஸ் சென்றார். பின்னர் அதற்காக எங்களிடம் மன்னிப்புக் கேட்டார்என்றும் இவ்விடயத்தை கடுமையாக சோடித்து இல்லாதவற்றையும் பொல்லாதவற்றையும் திட்டமிட்டு இணைத்து பொய்களைப் பரப்புவன் அதரின் பிரதான பிரச்சாரகரும் கமலா தேவியின் கள்ளப் புருஷனுமான மெளலவி அல்‍‍ஹாபிழ் நெளபர் தான் எனக்கூறுகின்றோம். இதில் என்ன பிழை இருக்கின்றது?
பொய்யன் நெளபரின் வாதம்: 3-விடயம் அனைத்தையும் அறிந்த அயலவர்கள் நகையை பறி கொடுத்த குடும்பத்தினரிடம் நாங்கள் எடுக்கவில்லை ஸஹ்றானின் மனைவிதான் எடுத்தார்என அபலைப் பெண்ணின் மீது பழி சுமத்துகிறார்கள்.
பதில்: இதில் இவன் என்ன சொல்ல வருகின்றான்? இதனை யாராவது அல்லா‍ஹ்வுக்காக தெளிவுபடுத்துங்கள். இவனது வார்த்தைகளை ஊன்றிக் கவனியுங்கள். மூளையைக் கழட்டி வைத்து விட்டு எழுதினானோ தெரியவில்லை..! முரண்படுவதில் நஷ்மலையும் முந்தி விட்டான் (இவன் எழுதியதை நன்றாகக் கவனித்தால் அயலவர்கள் திருடியதாக இவன் மறைமுகமாகச் சொல்கிறான்)
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!
இவ்வளவும் தான் இவன் கொட்டிய உளறல்கள்.ஒரு வரியும் தவறி விடாமல் அறிவுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் அல்லா‍ஹ்வின் அருளால் நாம் உண்மையை இங்கு பதிவு செய்திருக்கின்றோம். குறித்த இவனது ஆக்கத்தில் காணப்பட்ட வரட்டு வாதங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால்  எவ்வித ஆதாரங்களிமின்றி எட்டு அவதூறுகளை எம்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளான். அண்டப் புளுகனும் ஆகாசப் புளுகனுமான நவீன கோயபல்ஸ் (இவர் பொய்களை திரும்ப திரும்பச் சொன்னால் உண்மையாகும் என வாதிட்டவர்) நெளபர், நாட்டு வந்தவுடன் தனது முதல் மனைவி ‍ஹாஜரா மற்றும் அப்துல்லா‍ஹ்,ஸைத் ஆகிய இரு குழந்தைகளுடன் அழிவுச் சத்தியப் பிரமாணத்திற்கு வர வேண்டும் என வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம்.அத்துடன் கடந்த மின்மடலில் இவனுக்கெதிராக இட்ட சாப அழைப்பை மீண்டும் இறைவனிடம் முன்வைத்து விடைபெறுகின்றோம்.
யாஅல்லா‍ஹ்! நாம் மேலே கூறிய  விடயங்கள் அனைத்தும் உண்மை என்பதையும் நெளபர் மெளலவி கூறியவைகள் வீண் அபாண்டங்கள் என்பதையும் நீ நன்கறிவாய்! குறித்த விவகாரத்தில் நாம் பொய் சொன்னால் எங்கள் தாய்,தந்தை,மனைவி மற்றும் சகோதரங்கள் அனைவரையும் இறைவா நீ பூண்டோடு  அழித்து விடு! மேற்குறித்த விடயத்தில் நெளபர் மெளலவி பொய்யராக இருந்தால் அவரை நீயே பொருப்பெடுத்துக் கொள்! யாஅல்லா‍ஹ்! எங்கள் எதிரியாக இப்போது அவர் இருந்தாலும் அவரது மனைவியோ மக்களோ எமக்கு எதுவும் செய்யாததால் உன‌து சாபத்தை அவர்களுக்கு இறக்கி விடாதே! இறைவா! மெளலவியின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் நீ எத்தண்டனையை அவருக்கு வழங்க நாடினாயோ அத்தண்டனையை எங்கள் குடும்பத்தின் கண்முன்னே நீ காட்டி விடு! எனும் உணர்வுபூர்வமான சாப பிரார்த்தனையோடு விடை பெறுகின்றோம்.
அன்புடன்
மெளலவி M.C.M ஸ‍ஹ்றான் மற்றும் மெளலவி M.C.M ஸைனீ
காத்தான்குடி

( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. ) 

No comments:

Post a Comment