Saturday, September 7, 2013

மாற்றத்தை வேண்டி நிற்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா

ஆக்கம் : http://mbtj.org/srilanka/143/20130907-154230


“மாற்றத்தை வேண்டி நிற்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா”
கடந்த  ஷவ்வால் மாத தலைப் பிறை விஷயத்தில் கிண்ணியாவில் தென்பட்ட பிறையை மறைத்துவிட்டு தங்கள் சுகபோக வாழ்வை பாதுகாத்துக் கொண்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினர் பெருநாள் தினத்தில் பொது மக்களில் ஒரு சாராரை நோன்பு பிடிக்க வைத்து ஹறாத்தில் ஈடு படுத்திய செயலை பொதுமக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.


பெருநாள் கழிந்து,  தன் நோக்கமும் தேவையும் முடிவடைந்த தருவாயில்! கிண்ணியாவில் தென்பட்ட  ஷவ்வால் தலைப் பிறையை ஏற்றுக் கொண்டு, இலங்கை முஸ்லிம்கள் வியாழக்கிழமை தினத்தில் பெருநாள்  கொண்டாடியதும் சரி, வெள்ளிக்கிழமைத் தினத்தில்  பெருநாள்  கொண்டாடியதும் சரி, என்று வரலாறு காணாத புதுமை ஃபத்வாவை வெளியிட்டு, இழக்கவிருந்த தங்கள் ஆதரவாளர்களையும், கிளைகளையும்  தக்க வைத்துக் கொண்டது தலைமை.


ஷவ்வால் மாத தலைப் பிறை விஷயத்தில் விடிய விடிய குழம்பிப் போயிருந்த சமூகத்தின் குழப்ப நிலையை நீக்கி நல்லதோர் தீர்வை எட்டி ஒட்டு மொத்த சமூகத்திற்கும் சரியான செய்தியை அறிவிக்க, அன்றைய இரவில் கிண்ணியா கிளையுடன் கலந்துரையாட நேரம் கிடைக்காதது போல், காலம் கடந்து,  தன் நோக்கம் நிறைவேரிய பின் கலந்துரையாடி! “அதுவும் சரி,இதுவும் சரி” என்று அறிவித்ததன் மர்மம் தான் என்ன? (மர்மம் ஒன்றும் இல்லயென்று சொன்னால் மடமை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதையாவது ஏற்றுக் கொள்ளுமா? சமூகத்தை நடுத் தெருவில் விட்டுள்ள இந்தசபை!.)


உண்மையான பெருநாள் தினத்தில்  வானொலியில் உரையாற்றிய உலமா சபையின் தலைவர் (பெயரைக் கூரவும் நாவு கூசுகிறது) பிறை கண்ட அடிப்படையில் பெருநாள் கொண்டாடியது தவறு என்றும் அப்படி கொண்டாடிய அனைவரும் தவ்பா செய்ய வேண்டும் என்றும் கடும் வார்த்தைகளினால் சாடியதும், ஏகபோக தலைவர் நான்தான் என்று தம்பட்டம் அடித்ததும் மக்கள் மனதில் மறைந்திருக்காது.


கிண்ணியா மக்கள் கண்கூடாக கண்ட  பிறையை மறுத்தது மட்டுமன்றி, அடுக்கடுக்கான மடமைகளைகளையும், பொய்களையும், கூறி தான் சொல்வது தான் சரி என்பதில் பிடிவாதமாகவும் இருந்தவர், இரண்டாம் ஃப்த்வாவில் தான் கூரியது தவறு என்று ஏற்றுக் கொண்டதையும் மக்கள் மனதிலிருந்து மறைந்திருக்காது.


ஆக மொத்தத்தில் மக்களை மடையர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டு மார்க்க விஷயத்தில் இப்படி விளையாடுகின்றார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.



இது இவ்வாறிருக்க இந்த சபை மீண்டும் சமூகத்திற்கு இரட்டைத் துரோகத்தை செய்கிறது.
  1. கிண்ணியா உலமாசபையும் அங்குள்ள மக்களும் கண்ட பிறையின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடியவர்கள் சரியாகத்தான் செய்தார்கள் என்று இரண்டாம் கட்ட ஃபத்வா வெளியிட்ட இவர்கள் மீண்டும் துல்கஹ்தா பிறையில் ஷவ்வால் பிறையை பொய்படுத்தியுள்ளார்கள்.
  2. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அண்மையில் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் வெளியிட்ட கருத்துக்கள் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிதுள்ள நிலையில் இக்கருத்திற்கு எதிராக அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென ஜம்மியத்துல் உலமாவே முஸ்லிம்  கவுன்சிலுக்கு சமிஞ்சை வெளியிட்டுள்ளது. இந்தக கடிதத்தை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், முஸ்லிம் கவுன்சிலும் இணைந்துதான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவின் கருத்துக்களுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது என இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனாலும் இறுதிநேரத்தில் ஜம்மியத்துல் உலமா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது.

இதனையடுத்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீனுடைய கையொப்பத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது அவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இந்த ஈனச்செயல் முஸ்லிம் கவுன்சிலை காட்டிக் கொடுக்கும் கொடூரமான செயலாக மாத்திரம் இல்லாமல் சமூகத்தைப் பற்றி துளியும் அக்கறை அற்றவர்கள் தான் ஜம்மியத்துல் உலமா என்பதை நிரூபித்துள்ளார்கள்.


அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம் கவுன்சில் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.(வரவேற்பு கிடைத்ததால் தன்னையும் அதனுள் இணைத்துக் கொள்ள ஜம்மியத்துல் உலமாவின் பழைய பல்லவி பாடும் அவலம் தொடரலாம்.)


யார் இந்த அறிஞர்(?)சபை?
  1. வீட்டில் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது என்பதற்காக அரபு மத்றஸாவிற்கு அனுப்பப் பட்டவர்களே அதிக அளவிலான மவ்லவிகள். வளர்ந்து வரும் சமூகத்தில் அவ்வாறான நிலை மாற்றம் பெற்று வறுகின்ற போதும் இந்த சபையில் இருப்போரில் உள்ளவர்கள் பலரும் வீட்டில் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது என்பதற்காக அரபு மத்றஸாவிற்கு அனுப்பப் பட்டவர்களே என்பதை அவரவர் ஊர்களில் விசாரிக்கின்ற போது தெரிய முடிகிறது. (எனவேதான் வட்டிக்கு ஹலால் ஃபத்வா கொடுப்போரையும், பதவியை வைத்து மக்களிடம் பணம் பறிப்போரையும், பொதுமக்கள் ஈடுபடாத ஈனச் செயல்களில் ஈடுபடுவோரையும், இச்சபையில் காணமுடிகிறது)
  2. உலக அறிவு, பொது அறிவு என்பவை இவர்களுக்கு கிடையவே கிடையாது.அதற்கான காரணங்கள் இரண்டு:
    1. மத்றஸாவில் உள்ள அன்றாட அட்டவனை நிரல்… உ+ம் ஃபஜ்ர் தொழுதல்,குழித்தல்,பாடத்தில் அமர்தல்,ளுஹர்தொழுதல்,பகலுனவு,
      நித்திரை, அஸர்தொழுதல், உஸ்தாத்மார் அடிக்கும் பந்தை பொருக்குதல், மஹ்ரிப்தொழுதல், குர்ஆன் ஓதுதல், உண்னுதல், உறங்குதல்.(எட்டு வருட மத்றஸாவில் உலக அறிவு, பொதுஅறிவு கிடைக்க ஏதாவது வழியுண்டா?)
    2. மத்றஸாவில் இருந்து இவர்கள் வெளியான உடனே அவரது ஊரில் இவருக்கு ஒரு குத்பா கொடுப்பார்கள். படித்தோர், பாமரர் யாவரும் இவரது உரையை செவிதாழ்த்திக் கேட்பார்கள். என் பேச்சை எல்லாரும் கேட்கும் அளவு நான் பெரிய அறிவாலிதான் என்ற மமதை இவரில் மேலோங்கிவிடும். (பிறகு என்ன?…, கம்பெடுத்தவன் வேட்டைக் காரன் தான்.) தொடர்ந்து ஒரு பள்ளியில் வேலைக் கிடைக்கும். (வேலையென்றால் என்ன? ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் வகை வகையான உணவு வரும். தொழுவித்துவிட்டு, சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான்.) எனவேதான் அதிகமான மவ்லவிமார்களுக்கு உலகமே விளங்காத சூனியமாக உள்ளது.
சமூகத்திற்கு சாபக்கேடு ஏன்?
  • அல்லாஹ்வின் அருளால் இந்த சமூகத்தில் சட்டம் படித்த அறிவாளிகள் உள்ளார்கள். ஆனால் அவர்களை நாம் நீதிமன்றத்திட்கு மட்டும் ஒதுக்கி விட்டோம்.
  • அல்லாஹ்வின் அருளால் இந்த சமூகத்தில் அரசியல் படித்த அறிவாளிகள் உள்ளார்கள். ஆனால் அவர்களை நாம் அரசியலுக்கு மட்டும் ஒதுக்கி விட்டோம்.
  • அல்லாஹ்வின் அருளால் இந்த சமூகத்தில்  அனுபவங்கள் பல கொண்ட அனுபவசாலிகள் உள்ளார்கள். ஆனால் அவர்களை நாம் குடும்ப பிரச்சினைகளுக்கு மட்டும் ஒதுக்கி விட்டோம்.
இவ்வாறே இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம். இதுதான் எமது பலமும் பொக்கிஷமும் சிதரடிக்கப் பட்டுள்ள முறை.
தகுதியற்றோர் கையில் பதவிகள்.
பள்ளி நிர்வாகங்களும், சமூக பிரச்சினைகளும் ஒப்படைக்கப்படும் கூட்டமாக (பதவியாளர்களாக) மவ்லவிமார்களும், ஆசிரியர்களுமே உள்ளார்கள்.
மவ்லவிமார்கள்: படுக்கையும் பள்ளியுமாகவே காலம் கழிப்பவர்கள்.
ஆசிரியர்கள்: பாடசாலையும், இடைநேர வகுப்புமாகவே காலம் கழிப்பவர்கள்.
(எனவேதான் சமூகப் பிரச்சினைகளும், சமூகத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் சங்கிலித் தொடராக தொடர்ந்து கொண்டிருக்கிறது.)
உணர்ந்திடுவீர்…உயர்ந்திடுவீர்..
உலமாசபையின் கையில் சமூகத்தின் அத்தனை பொறுப்புக்களையும் அடகு வைத்துள்ளது சமூகத்திற்கு ஆரோக்கியம் இல்லை. மார்க்க ரீதியான விடயங்களை மாத்திரம் பொறுப்பாகக் கொண்ட சபையாக உலமா சபை தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியம் அவசரமாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆயினும் இதனை அவர்களால் உணரக் கூடிய அறிவு உலமா சபைக்கு இருக்க வாய்ப்பே இல்லை. உலமா சபையை விமர்சித்து விமர்சித்து (நான் உற்பட)சமூகத்தின் சகோதரபலத்தை இன்னுமின்னும் பலவீனப்படுத்துவதைவிட, மார்க்க ரீதியான விடயங்களை மாத்திரம் பொறுப்புகொண்ட சபையாக உலமா சபையை மாற்றியமைத்து, சமூகத்தின் அத்தனை அறிவுகளும் கலந்துவரக்கூடிய சமூகப்பொறுப்பு சபையொன்று அவசரமாக ஏற்படுத்தப் பட வேண்டும். எமது உலமாக்களின் குறையறிவையும், அனுபவ முதிர்சியின்மையையும், அவர்களுக்கே உரிய இதர பலவீனங்களையும் சமூகத்தின் எதிரிகள் ஆயுதமாகப் பயன் படுத்துகிறார்கள் என்பது தெளிவு.
சமூகச் சிந்தனையாளர்கள், சமூக அக்கறை படைத்தோர், இதுபற்றி அல்லாஹ்விடம் கேள்வி கேட்கப் படுவீர்கள்.
சமூகத்தின்பொறுப்புக்களனைத்தையும் உலமாக்களின் கையில் அல்லாஹ் வழங்கவில்லை. மாறாக ஆலிம்களின் கையில் தான் வழங்கியுள்ளான்.(ஆலிம்கள் என்ற அரபுச் சொல் “உலக அறிவை சுமந்தவர்கள்” என்ற பொருளைக் குறிக்கும்.)
எனவே!
உலக அறிவை சுமந்தவர்களே!
உணர்ந்திடுவீர்..உயர்ந்திடுவீர்..
விடடுதலை விடுதலை என்று!
கத்தும் எம்சமூகத்தின் கதறலுக்கு..
விடைகொடுக்க புறப்படுவீர்…
உலக அறிவை சுமந்தவர்களே!
ஷஹீதானால் சுவனம்..
அநியாயத்தைக் கண்டும்!
காணாதது போல்!
இருந்தால் நீதியேது…
நீதிசெலுத்த கற்றுத்தந்த..
மார்க்கத்தை சுமந்த ஆலிம்களே!
சக்தியற்ற சருகுகள்!
உலமாசபையென்று! சுற்றி நிற்க..
இரும்புப் பலம் கொண்ட
ஆலிம்களே!அறிவாளிகளே!
உள்ளிருந்து நீங்கள்..
மவ்னித்து நிற்பதும் சரியோ?
தட்டிக் கேற்க வேரு யாரிருக்கார்.
உரிமைக் குரலெலுப்ப வேரு யாரிருக்கார்.
காத்துவந்த உரிமைகலெல்லாம்!
இப்படி ஒன்றொன்றாய் போனதென்றால்!
நீர் பெற்ற கல்வி!மீட்டிடாத
கண்ணீராய் போய்விடும்.அதற்கு முன்
உலக அறிவை சுமந்தவர்களே!ஆலிம்களே!
உணர்ந்திடுவீர்..உயர்ந்திடுவீர்..
– அபூசுமையா


( முக்கிய குறிப்பு : ட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

2 comments:

  1. பிறையை கண்டு நோன்பு வையுங்கள், பிறையை கண்டு நோன்பை விடுங்கள், மேக மூட்டமாக இருந்தால், மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள். எனினும் 2 முஸ்லிம்கள் (எங்கிருந்தாவது பிறை கண்டு) சாட்சி சொன்னால் அதை ஏற்று செயற்படுத்துங்கள்.(நசயீ 2116,முஸ்னத் அஹ்மத் 7516,7581,7778,9472,9556,9654,9853,10060)

    ReplyDelete
  2. நபி(ஸல்) காலத்து அபுஜஹீலை தலைவனாகக் கொண்ட தாருந்நத்வா உலமாக்களுக்கும் இந்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை, அவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் அப்படியே பின்பற்றுகிறார்கள் இந்த புரோகித அமைப்பினர். வழிகேட்டில் சென்று நரகை நிரப்பும் பெருங்கொண்ட கூட்டம் உங்கள் பின்னால் அணி வகுப்பார்கள் என்பதே இவர்களுக்கு இருக்கிற ஒரே பிளஸ் பாயிண்ட். ஆனால் நாளை மறுமையில் இவர்கள் நிலை பரிதாபத்திற்குரியதேயாகும்.

    நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் கி.பி.440ல் அவர்களது முப்பாட்டனாரின் முப்பாட்டனார் குசை நிறுவிய தாருந் நத்வா என்ற அறிஞர்களின் சபையை அதாவது உலமா சபையை இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்.
    அக்கல்வி முறையை வேரோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டினார்கள். அதன் அறிஞர்களை ஜாஹில்கள்-மடையர்கள் என்றும், அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என குறைஷ்களால் போற்றப்பட்ட அதன் தலைவனை அபூஜஹீல்-மடமையின் தந்தை எனவும் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

    தற்போது இந்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் முனாபிக் தனத்தை மக்கள் படிப்படியாக உணர்ந்து வருகின்றனர் எனவே தாருந் நத்வாவுக்கு ஏற்பட்ட அவ்வாறானதொரு இழிவு நிலை இந்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை அதற்க்கு முன்னர் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொண்டாலே தவிர..இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete